பாடசாலை நேரத்தை மாலை 4 மணிவரை நீடிக்க வேண்டும் – விளையாட்டுத்துறை அமைச்சர் யோசனை!
Sunday, September 18th, 2022பாடசாலை நேரத்தை மாலை 4 மணிவரை நீடிக்க வேண்டும் என விளையாட்டுத்துறை அமைச்சர் ரொசான் ரணசிங்க தெரிவித்துள்ளார்.
தம்புள்ளையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டு கருத்துரைத்த போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அத்துடன் அதிகரிக்கப்படும் மேலதிக நேரம் மாணவர்களின் விளையாட்டுக்காக ஒதுக்கப்பட வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.
கல்வி சார்பிலும் விளையாட்டுக்காக அதிக வளத்தை ஒதுக்குமாறு அமைச்சரிடம் கோரியுள்ளேன்.
தற்போது, இளைஞர்கள் மற்றும் சிறுவர்கள் நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவை கவலைக்குரிய விடயமாகும். பாடத்திட்டத்தில் அனைத்தும் புகுத்தப்பட்டிருப்பினும் இது சாத்தியமாகவில்லை.
கல்வி அமைச்சர், பாடத்திட்டத்தில் விளையாட்டுக்கு அதிக முக்கியதுவம் அளித்துள்ளார். விளையாட்டை ஒரு பாடத்திட்டமாக கருதி, அது மாலை 4 மணிவரை முன்னெடுக்கப்பட வேண்டும் இது மாணவர்களின் பாதுகாப்புக்கு நல்லது. அதுமட்டுமல்லாமல் பெற்றோர், பிள்ளைகளின் உறவை மேலும் வலுப்படுத்தும்.
குறைந்தது 2 மணித்தியாலங்களாவது, பிள்ளைகள் விளையாட்டில் ஈடுபடவேண்டும் என விளையாட்டுத் துறை அமைச்சர் ரொசான் ரணசிங்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|