பாடசாலை நேரத்தில் பகுதி நேர வகுப்புக்கள் நடத்தத் தடை – கல்வியமைச்சு நடவடிக்கை!

Tuesday, January 15th, 2019

இலங்கையில் புதிய தடையொன்று விரைவில் வரவுள்ளதாக கல்வியமைச்சுத் தெரிவித்துள்ளது.

அந்த வகையில் பாடசாலை நேரத்தில் அதாவது காலை 7.30 மணி முதல் 1.30 வரையான நேரத்தில் பகுதி நேர வகுப்புக்களை நடத்த தடை விதிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்த விடயத்தை கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். அத்துடன் இதுதொடர்பான அமைச்சரவைப் பத்திரமொன்றில் அவர் கையொப்பமிட்டுள்ளதாகவும் தெரியவருகிறது.

Related posts: