பாடசாலை சேவை சிற்றூர்தி – அலுவலக சேவை வாகனங்களை ஒழுங்குபடுத்த நடவடிக்கை!

எதிர்காலத்தில், மேல்மாகாண பாடசாலை சேவை சிற்றூர்தி மற்றும் அலுவலக சேவைகளில் ஈடுபடும் வாகனங்களை ஒழுங்குபடுத்த நடவடிக்கை எடுப்பதாக, மேல்மாகாண பயணிகள் போக்குவரத்து அதிகார சபை தெரிவித்துள்ளது.
மக்களுக்கு முறையான போக்குவரத்து சேவைகளை வழங்கும் நோக்கில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அதிகார சபையின் தலைவர் பிரசன்ன சஞ்சீவ தெரிவித்துள்ளார்.
மேல்மாகாணத்திற்குள் எவரேனும் ஒருவர், பணம் செலுத்தி பயணிகள் போக்குவரத்து சேவையை முன்னெடுப்பாராயின் அது மேல்மாகாண பயணிகள் போக்குவரத்து அதிகார சபையுடன் இணைந்து முன்னெடுக்க வேண்டிய செயற்பாடாகும்.
இதன்படி, எதிர்காலத்தில் முச்சக்கர வண்டிகள், பாடசாலை சேவை வேன்கள் மற்றும் அலுவலக வாகன சேவைகளை முறையாகவும் வினைத்திறனுடனும் முன்னெடுக்க திட்டமிடப்பட்டுள்ளதாக மேல்மாகாண பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் பிரசன்ன சஞ்சீவ குறிப்பிட்டுள்ளார்
000
Related posts:
|
|