பாடசாலை சீருடை விநியோகம் ஜூலை 12 க்கு முன்னர் பூர்த்தி – கல்வி அமைச்சு அறிவிப்பு!
Friday, May 26th, 2023பாடசாலை மாணவர்களுக்கான சீருடை விநியோகம் எதிர்வரும் ஜூன் 12ஆம் திகதிக்கு முன்னர் பூர்த்தி செய்யப்படுமென, கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
முதற்கட்டமாக வடக்கு, கிழக்கு, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலுள்ள பாடசாலை மாணவர்களுக்கு சீனாவினால் வழங்கப்பட்ட சீருடைத் துணி விநியோகிக்கப்பட்டுள்ளதாக, அந்த அமைச்சு தெரிவித்துள்ளது.
இதேவேளை, உள்ளூர் விநியோகஸ்தர்களால் வழங்கப்பட்ட 38,31,000 மீற்றர் சீருடைத் துணியில் 35,61,000 மீற்றர் இதுவரையில் விநியோகிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 27,000 மீற்றர்
சீருடைத் துணி காலி, களுத்துறை மற்றும் சிலாபம் ஆகிய இடங்களில் இறுதிக் கட்டத்தின் கீழ் விநியோகிக்கப்படுவதாக, தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பாடசாலை சீருடை 1,26,94,000 மீற்றர் தேவை எனவும் 4.2 மில்லியன் பாடசாலை மாணவர்கள் மற்றும் மாணவர் பிக்குகளுக்கு இது விநியோகிக்கப்படும் எனவும், கல்வி அமைச்சு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
|
|