பாடசாலை காலத்திலிருந்தே பிள்ளைகளை விளையாட்டுகளில் பங்கேற்க ஊக்குவிக்க வேண்டும் – பிரதமர் மஹிந்த ராஜபக்ச வலியுறுத்து!

Friday, February 12th, 2021

பாடசாலை காலத்திலிருந்தே பிள்ளைகளை விளையாட்டுகளில் பங்கேற்க ஊக்குவிக்க வேண்டும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஆணைமடு கண்ணங்கர வித்தியாலயத்தின் புதிய மூன்று மாடி கட்டிடத்தை திறந்துவைத்து உரையாற்றுகையிலேயே பிரதமர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில் –

எமது பிள்ளைகளுக்கு சிறந்த கல்வியை வழங்குவதே எமது அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாகும். நாம் எவ்வளவு பாடுபட்டாலும் குறிப்பிட்ட எண்ணிக்கையானோரே பல்பலைக்கழகத்திற்கு செல்ல முடியும். அதனால்தான் தொழில்நுட்ப கல்லூரிகள் மற்றும் தொழிற்பயிற்சி நிறுவனங்கள் தேவைப்படுகின்றன.

விசேடமாக தொழில் பயிற்சி அதிகாரசபையை உருவாக்கி, எமது பிள்ளைகளின் கரங்களை பலப்படுத்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளோம்.

அவ்வாறு பிள்ளைகளின் கரங்களை பலப்படுத்தினால் அவர்களுக்கு வேலைவாய்ப்பை பெற்று கொள்வதற்கு கடினமாக அமையாது. எமது யுகத்தில் நாங்கள் இளைஞர் யுவதிகளுக்கு பயிற்சி அளித்து கொரியா மற்றும் ஜப்பானுக்கு அனுப்பத் ஆரம்பித்துள்ளோம் என்றும் அவர் இதன்போது தெரிவித்துள்ளார்.

அதேநேரம் பல பாடசாலைகளில் விளையாட்டு மைதானங்கள் இல்லை. பாடசாலை காலத்திலிருந்தே பிள்ளைகளை விளையாட்டுகளில் பங்கேற்க ஊக்குவிக்க வேண்டும் என நான் எதிர்பார்க்கிறேன். பிள்ளைகள் புத்தக பூச்சிகளாக இருப்பதும் ஒரு பாரிய அழுத்தமாகும். எனவே, இந்த காலகட்டத்தில் நீங்கள் பெறும் அறிவு கல்விக்கு மட்டுமல்ல, விளையாட்டு மற்றும் தொழிற்பயிற்சிக்கும் பயனுள்ளதாக இருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்.

பிள்ளைகள் சிறப்பாக கல்வி கற்க வேண்டும் என்றே இந்த பிள்ளைகளின் பெற்றோரான நீங்கள் அனைவரும் நாங்களும் எதிர்பார்க்கின்றோம். கடின முயற்சியுடன் கல்வி கற்று சிறந்த குடிமக்களாக மாறுமாறு நாம் உங்களிடம் கேட்டுக்கொள்கிறோம் எனவும் இதன்போது அவர் மேலும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது

Related posts: