பாடசாலை ஆசிரியர்களுக்கு அடுத்த வாரம் கோவிட் தடுப்பூசி – ஜனாதிபதி அனுமதி வழங்கியுள்ளதாக கல்வி அமைச்சர் அறிவிப்பு!

Saturday, July 3rd, 2021

பாடசாலை ஆசிரியர்களுக்கு அடுத்த வாரம் கொரோனா தடுப்பூசி ஏற்றுவதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அனுமதி வழங்கியுள்ளதாக கல்வி அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

இதனடிப்படையில் 2 இலட்சத்து 42 ஆயிரம் ஆசிரியர்களுக்கு தடுப்பூசி ஏற்றுவதற்கு கல்வி அமைச்சு திட்டமிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர் மேலும் கூறுகையில் –

பாடசாலைகளை திறப்பது குறித்து ஜனாதிபதியுடன் நீண்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. தடுப்பூசி ஏற்றப்பட்டதன் பின்னர் ஆசிரியர்கள் பாதுகாப்பை உணர்வார்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் பெற்றோரும் தங்களது பிள்ளைகளை நம்பிக்கையுடன் பாடசாலைகளுக்கு அனுப்பி வைக்க முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.

தடுப்பூசி ஏற்றப்பட்டால் இந்த மாத இறுதியளவில் பாடசாலைகளை திறப்பது பாதுகாப்பானதாக இருக்கும் எனவும் கல்வி அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் நம்பிக்கை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: