பாடசாலை அதிபர்களுக்கு கல்வியமைச்சு விடுத்துள்ள முக்கிய அறிவுறுத்தல்!

Saturday, March 14th, 2020

2019/2020 கல்வியாண்டுக்கான பல்கலைக்கழக அனுமதி விண்ப்பங்கள் மார்ச் 26 ஆம் திகதிக்கு நிறைவடையவுள்ள நிலையில், இதற்கு முன்னதாக விண்ணப்பிக்கும் மாணவர்கள் தங்களது விண்ணப்பங்களை பாடசாலை அதிபர்களின் ஊடாக உறுதிப்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், முதலாம் தவணைக்கான விடுமுறை தற்போது வழங்கப்பட்டுள்ளதன் காரணமாக மாணவர்களுக்கு அசௌகரியங்கள் ஏற்படாமல் இருக்க, தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு கல்வி அமைச்சு அனைத்து அதிபர்களுக்கும் அறிவுறுத்தியுள்ளது.

எதிர்வரும் தேர்தலில் பங்கேற்கவுள்ள கல்வி மற்றும் கல்விசாரா ஊழியர்கள் அனைத்து விண்ணப்பங்களையும் பூர்த்தி செய்ய வேண்டும் என்பதோடு, அஞ்சல் வாக்களிப்பு செயல்முறைக்கு பாடசாலையில் தேவையான ஏற்பாடுகளை செய்யுமாறு அனைத்து பாடசாலையின் அதிபர்களுக்கும் கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts: