பாடசாலையில் பெண்களின் பைகளை ஆண்கள் பரிசோதிப்பதை தவிர்க்க வேண்டும் – தமிழர் ஆசிரியர் சங்கம்!

Friday, May 10th, 2019

தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள ஆசாதாரண சூழ்நிலையில் பாடசாலைக்குச் செல்லும் அனைவரும் சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றனர். மேலும் இதில் சில இடங்களில் பெண் ஆசிரியர்களின் கைப்பைகளும், பெண் பிள்ளைகளின் பைகளும் ஆண்களால் பரிசோதிக்கப்படுகின்ற போது சில சங்கடமான நிலை உருவாவதாக ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளனர்.

ஆகையால் பரிசோதனையின் போது பெண்களின் பைகளை ஆண்கள் பரிசோதிப்பதைத் தவிர்க்குமாறு ஆசிரியர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

மேலும் இவ் விடயம் தொடர்பில் தெரியவருவதாவது,

பெண்கள் தமது அத்தியாவசிய தேவைக்காகக் கொண்டு செல்லப்படும் பொருட்கள் அனைத்தும் முற்றாக வெளியில் கொட்டப்பட்டு சோதனை செய்யப்படுகின்றன.

இதைவிட மாணவிகளின் தோழில் வைத்தே பைகள் பரிசோதனை செய்யப்படுகின்றன. இவ்விடயம் தொடர்பில் பலரும் தமது அதிருப்தியை வெளியிட்டு ஆண்கள் பரிசோதனையில் ஈடுபடுவதால் பலர் முன்னிலையில் சில விடயங்கள் தங்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்துவதாக எடுத்துரைத்துள்ளனர்.

இவற்றைத் தவிர்க்க பாடசாலையில் சோதனை நடவடிக்கைகளில் மிகுந்த அவதானத்துடன் நடந்துகொண்டு தேவையற்ற பிரச்சினைகளை தவிர்க்குமாறு இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் வினயத்துடன் வேண்டுகோள் விடுத்துள்ளது.

Related posts: