பாடசாலையின் பெயரில் பணம் சேகரிக்கும் போலி ஆசாமிகள் – எச்சரிக்கையாக இருக்குமாறு அதிபர் கோரிக்கை!

Saturday, April 3rd, 2021

யாழ்ப்பாணத்தில் பாடசாலைக்கென பணம் சேகரிக்கும் நடவடிக்கையில் சில போலி ஆசாமிகள் ஈடுட்டுள்ளதாகவும் அவர்கள் தொடர்பில் எச்சரிக்கையாக இருக்கும்படியும் குறித்த பாடசாலை அதிபர் அறிவித்துள்ளார்.

புத்தூர், சிறுப்பிட்டி, ஆவரங்கால் மற்றும் அச்சுவேலி பிரதேசங்களில் புத்தூர் சோமாஸ் கந்த கல்லூரியில் கல்வி பயிலும் வறிய / அங்கவீனமான மாணவர்களுக்கான உதவி என்ற பெயரில் சிலர் பணம் சேகரிப்பதாக கூறப்படுகின்றது.

இந்த நிலையில் இவ்வாறு பணம் சேகரிக்க எவருக்கும் அனுமதி வழங்கப்படவில்லை என்றும் அவ்வாறு பணம் சேகரிப்போருக்கும் கல்லூரிக்கும் அல்லது கல்லூரியில் இயங்கும் பழைய மாணவர் சங்கம் போன்ற எந்த அமைப்புக்கும் எவ்வித தொடர்புமில்லையெனவும் கல்லூரி அதிபர் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து பொதுமக்கள் அவதானமாக இருக்குமாறும் இவ்வாறு பணம் சேகரிப்பவர்களின் விபரம் தெரிந்தால் அதுகுறித்து கல்லூரி அதிபருக்கோ அல்லது அருகிலுள்ள பொலீஸ் நிலையத்திலோ முறையிடுமாறும் கல்லூரி அதிபர் கேட்டுக்கொண்டுள்ளார்

Related posts:


முகக் கவசம் இன்றி பயணிப்பவர்களுக்கு அனுமதி கிடையாது - தனியார் பேருந்து சங்கத்தின் தலைவர் அறிவிப்பு!
இலங்கையில் 18 வயதுக்கு குறைந்தவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்படாது - அரச மருத்துவ அதிகாரிகள் ச...
சீன கம்யூனிஸ்ட் கட்சியின் 100 ஆவது ஆண்டுப் பூர்த்தி – மத்திய வங்கியால் 1000 ரூபாய் நாணயம் வெளியீடு!