பாடசாலைப் போக்குவரத்து சேவைகளில் சுகாதார விதிமுறைகள் குறித்து பரிசோதனை – பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன!

பாடசாலை மாணவர்கள் பயணிக்கும் பேருந்துகள், தனியார் சிற்றுார்திகள் மற்றும் பொதுப் போக்குவரத்து சேவைகள் போன்றவற்றில் சுகாதார விதிமுறைகளைப் பின்பற்றுகின்றமை தொடர்பில் ஆராய இன்றைய தினமும் விசேட பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
இப்பரிசோதனைகளுக்கிடையில் பாடசாலை பேருந்துகள் மற்றும் சிற்றுார்தி சாரதிகள், உதவியாளர்கள் போன்றோருக்கு எழுமாறாக பி.சீ.ஆர். மற்றும் ரெபிட் எண்டிஜென் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுமெனவும் காவல்துறை ஊடகப் பேச்சாளர் தொிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
பொதுமன்னிப்புக் காலம் அறிவிப்பு!
நாளாந்தம் 500 சுற்றுலா பயணிகள் மாத்திரமே இலங்கைக்கு வருகை தர முடியும் - சுற்றுலா மற்றும் சிவில் விம...
பேராதனை வைத்தியசாலையின் சத்திரசிகிச்சைகள் மீண்டும் ஆரம்பம் - மருந்துகளுக்கான தேவைகளை கண்டறியுமாறு இந...
|
|