பாடசாலைகள் மீளவும் ஆரம்பிக்கப்பட்டாலும் இணைப்பாடவிதான செயற்பாடுகளுக்கு கட்டுப்பாடு – கல்வி அமைச்சின் செயலாளர்!

பாடசாலைகள் மீளவும் ஆரம்பிக்கப்பட்டாலும் எதிர்வரும் சில மாதங்களுக்கு இணை பாடவிதான செயற்பாடுகளை வரையரை செய்யுமாறு கல்வி அமைச்சின் செயலாளர் M.H.M. சித்ராநந்தவினால் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
அத்துடன், விடுபட்டுள்ள கற்கைநெறிகளை முழுமையாக பூர்த்திசெய்வதற்கு தேவையான நடவடிக்கைகளுக்காக இந்த காலப்பகுதியை முழுமையாகப் பயன்படுத்துமாறும் அவர் ஆலோசனை வழங்கியுள்ளார்.
மேலும் காலைநேர ஒன்றுகூடல், நாளாந்த நிகழ்வுகள் உள்ளிட்ட இணை பாடவிதான செயற்பாடுகளை வரையரை செய்யுமாறும் பாடசாலை அதிபர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் பங்குபற்றக்கூடிய உடற்பயிற்சி செயற்பாடுகள் சுகாதார வழிமுறைகளுடன் பின்பற்ற வேண்டும் எனவும் கல்வி அமைச்சின் செயலாளர் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
பொலிஸ் திணைக்கள பதில் ஊடகப் பேச்சாளராக அஜித் ரோஹன!
ஒரு வார காலத்திற்கு பாடசாலைகளை மூட அரசு அவசர ஆலோசனை!
நல்லூர் திருவிழாவை முன்னிட்டு சுகாதார வழிகாட்டல் விழிப்புணர்வுகள் முன்னெடுக்கப்பட வேண்டும் - சபை அம...
|
|