பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் மன ஆரோக்கியத்திற்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் – கல்வி அமைச்சர் வலியுறுத்து!

குழந்தைகளின் ஆரம்ப ஆண்டுகளில் அவர்களின் மன ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது அவர்களின் வளர்ச்சிக்கு மிக முக்கியமாக அமையும் என கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல் பீரிஸ் தெரிவித்துள்ளார்.
எனவே மாணவர்கள் உணர்ச்சி ரீதியாக ஆரோக்கியமாகவும் இருக்க பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் இதனை ஒரு பாடமாகக் கற்பிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர் – மன அழுத்தம் காரணமாக அதிக இறப்புகள் உலகளவில் பதிவாகின்றமையை சுட்டிக்காட்டியதுடன், தியானம் போன்ற செயற்பாடுகள் ஈடுபட வேண்டிய அவசியத்தையும் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
அதிவேக வீதிகளில் விதிமுறைகளை மீறிய 19,837 சாரதிகள் கைது !
நாளை மின்சாரம் தடைப்படும்!
எரிவாயு விலையை குறைக்க ஆலோசனை?
|
|