பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பில் ஜனாதிபதி நடவடிக்கை – ஊடகப்பிரிவு தெரிவிப்பு!

பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டு வருவதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் தொலைகாணொளி தொழில்நுடபம் ஊடாக கொவிட் தடுப்பு செயலணி கூட்டம் நேற்றையதினம் நடைபெற்றது.
இதன்போது கிராமப்புறங்களில் உள்ள 100 க்கும் குறைந்தளவான மாணவர்கள் எண்ணிக்கையை கொண்ட 3 ஆயிரம் பாடசாலைகளை முதல் கட்டமாக திறப்பது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பில் பரிந்துரைகளை முன்வைப்பதற்கான பொறுப்பை சுகாதார மற்றும் கல்விதுறைசார் அதிகாரிகளைக் கொண்ட தொழிநுட்ப குழு ஒன்றிடம் ஒப்படைக்க ஜனாதிபதி தீர்மானித்துள்ளார்.
2020 மற்றும் 2021 ஆகிய வருடங்களில் பாடசாலைகள் மூடப்பட்டதால், சுமார் 7 இலட்சம் மாணவர்களுக்கு ஆரம்பக் கல்வியும், அவ்வாறே மேலும் பல மாணவர்களுக்கு முன்பிள்ளை பருவ கல்வியும் கிடைக்காமல் போனதால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது
இதனிடையே
ஆசிரியர்கள் உள்ளிட்ட கல்வி சாரா ஊழியர்களுக்கு முழுமையாக தடுப்பூசி போடப்பட்டுள்ளதால் பாடசாலை மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி முடிந்தவுடன் பாடசாலைகள் மீண்டும் திறக்கப்படும் என்று சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல நம்பிக்கை தெரிவித்துள்ளார்..
அத்துடன் 12 முதல் 18 வயதுக்குட்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு விரைவில் தடுப்பூசி போட கவனம் செலுத்தப்பட்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
கொரோனா தொற்றுநோய் காரணமாக பாடசாலைகள் சுமார் ஒன்றரை ஆண்டுகளாக மூடப்பட்டுள்ளதாகவும், பாடசாலைகள் மீண்டும் தொடங்க அந்த வயதினருக்கு விரைவில் தடுப்பூசி போடப்பட வேண்டும் என்றும் அமைச்சர் வலியுறுத்தினார்.
உலக சுகாதார நிறுவனம் உட்பட சர்வதேச நிறுவனங்கள் குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவதற்கான பல அளவுகோல்களை சுட்டிக்காட்டியுள்ளதாக அமைச்சர் கூறினார்.
குழந்தைகளுக்கான தடுப்பூசி தொடங்கியவுடன், தரம் 7 முதல் தரம் 13 வரையிலானவர்களுக்கு தடுப்பூசி போடலாம் என்று அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இதேநேரம் 20 முதல் 29 வயதிற்குட்பட்டவர்களுக்கு தடுப்பூசியின் முதல் டோஸ் 34 வீதத்தினருக்கும் இரண்டாவது டோஸ் 12% க்கும் கொடுக்கப்பட்டுள்ளது என்று சுகாதார அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|