பாடசாலைகளை மீண்டும் திறப்பது தொடர்பான முடிவை எட்டுவதற்கு முன்னர் அது தொடர்பாக ஆழமாக சிந்தித்து செய்யப்பட வேண்டும் – கல்வி அமைச்சர் தெரிவிப்பு!

முன்னர் திட்டமிட்டபடி நவம்பர் 9 ஆம் திகதி மூன்றாம் தவணைக் கல்வி நடவடிக்கைக்காக பாடசாலைகளை மீண்டும் திறப்பது குறித்த இறுதி முடிவு இந்த வார இறுதியில் எட்டப்படும் என்று கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.
இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து வெளியிட்ட அமைச்சர், பாடசாலைகளை மீண்டும் திறப்பது தொடர்பான முடிவை எட்டுவதற்கு முன்னர் அது தொடர்பாக ஆழமாக சிந்தித்து செய்யப்பட வேண்டும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்தோடு பாடசாலை மாணவர்களின் சுகாதார பாதுகாப்பு மிக முக்கியமானது என்றும் கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் குறிப்பிட்டார்.
மாணவர்கள் கல்வியைப் பெறுவதை உறுதி செய்ய, தேவை ஏற்படின் மாணவர்களுக்கு இணைய வழி கல்வியை வழங்கவும் தீர்மானித்துள்ளதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்தார்.
Related posts:
ஜனாதிபதி தேர்தல் குறித்து சங்கக்காரவின் கருத்து!
முதலாம் தரத்திற்கு மாணவர்களை சேர்ப்பதற்கான சுற்றறிக்கை!
நெற்செய்கைக்கு ஏற்படும் சேதங்களுக்கு மாத்திரமே நட்டஈடு - அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே அறிவிப்பு!
|
|