பாடசாலைகளை மீண்டும் திறக்க ஆசிரியர்களின் ஆதரவு அவசியம் – அமைச்சர் மஹிந்தானந்த அளுத்தகமகே வலியுறுத்து!

Saturday, October 9th, 2021

பாடசாலை நடவடிக்கைகளை மீண்டும் தொடங்குவதற்கு அதிபர்களும் ஆசிரியர்களும் ஆதரவை வழங்க வேண்டும் என அமைச்சர் மஹிந்தானந்த அழுத்கமகே கோரிக்கை விடுத்துள்ளார்.

ஆசிரியர்களின் சம்பளம் உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்க வேண்டும் என்பதில் தானும் உறுதியாக இருப்பதாக குறிப்பிட்டார்.

கொரோனா தொற்று காரணமாக மாணவர்கள் கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளாக கல்வியை இழந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

ஆகவே அவர்களுக்காக மீண்டும் கல்வி நடவடிக்கையை தொடங்கும் அரசாங்கத்தின் முயற்சிக்கு ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் ஆதரவை வழங்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளமை குறிப்பிடத’;தக்கது.

Related posts: