பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பது தொடர்டபில் இன்று தீர்மானம் – கல்வி அமைச்சர்!

Tuesday, April 23rd, 2019

நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண நிலைமை அடுத்து இரண்டாம் தவணைக்காக  இலங்கையிலுள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் நேற்றும் இன்றும் விடுமுறை வழங்கப்பட்டிருந்த நிலையில் பாடசாலைகளை மீண்டும் எப்போது ஆரம்பிப்பது என்பது தொடர்பான தீர்மானம் இன்றையதினம் எடுக்கப்படவுள்ளது.

பாடசாலைகள் மீண்டும் எப்போது ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசத்திடம் கோரிய போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்க பாடசாலைகளில் இரண்டாம் தவணைக்கான கல்வி நடவடிக்கைகள் நேற்று ஆரம்பிக்கப்பட இருந்தன.

எனினும் நேற்றுமுன்தினம் இலங்கையின் எட்டு இடங்களில் இடம்பெற்றிருந்த குண்டு வெடிப்பு சம்பவங்களையடுத்து நேற்றும் இன்றும், பாடசாலைகளுக்கு விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டது.

இவ்வாறான சந்தர்ப்பத்திலேயே மேற்படி விடயத்தை கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் கூறியுள்ளார்.

Related posts: