பாடசாலைகளை திறப்பது தொடர்பில் பல பிரச்சினைகள் உண்டு: மீள் பரிசீலனை செய்யுமாறும் இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் கோரிக்கை!

கொரோனா வைரஸ் காரணமாக மூடப்பட்டிருந்த பாடசாலைகளை நான்கு கட்டங்களின் கீழ் மீண்டும் திறப்பதற்கு அரசாங்கம் மேற்கொண்டுள்ள தீர்மானத்தில் பல பிரச்சினைகள் காணப்படுவதாக இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.
இதற்கமைய பாடசாலை நிறைவடையும் நேரம் மற்றும் உயர்தரம், புலமை பரிசில் பரீட்சை ஆகியனவற்றை விரைந்து நடத்துவதற்கு மேற்கொண்டுள்ள தீர்மானங்கள் குறித்து மீள் பரிசீலனை செய்யுமாறும் அந்த சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
இலங்கை ஆசிரியர்கள் சேவை சங்கம் கல்வி அமைச்சருக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அண்மையில் கல்வி அமைச்சால் எதிர்வரும் ஜுன் மாதம் 29 ஆம் திகதி பாடசாலைகள் மிள ஆரம்பிக்கப்படும் என தெரிவித்தள்ளரைம குறிப்பிடத்தக்கது.
Related posts:
சர்வதேசத்தின் வேண்டுகோளுக்கிணங்க வடக்கில் காணிகளை விடுவிக்கவில்லை- பாதுகாப்புச் செயலாளர்!
சோதனைகளை சாதனைகளாக்கி சாதித்துக்காட்டியவர்கள் நாம் - ஈ.பி.டி.பியின் தவிசாளர் மித்திரன்!
தேர்தலில் போட்டியிடுவதில்லை – திலங்க!
|
|