பாடசாலைகளை சுத்தப்படுத்தவும் – கல்வி அமைச்சு!

இரண்டாம் தவணைக்காக அனைத்து பாடசாலைகளும் திறக்கப்படுவதற்கு முன்னர், பாடசாலைகளில் டெங்கு பரவுவதற்கு ஏதுவான காரணிகளை முற்றாக அழித்தொழித்து, சுற்றுச்சூழலை, நன்றாக சுத்தப்படுத்துமாறு, அனைத்து பாடசாலைகளின் அதிபர்களுக்கும், கல்வியமைச்சு, அறிவித்துள்ளது.
பாடசாலைகளை சுத்தப்படுத்துவதற்காக, பெற்றோர், பழைய மாணவர்கள் சங்க உறுப்பினர்கள், பாடசாலை அபிவிருத்திக் குழுவின் அங்கத்தவர்கள் போன்றவர்களின் உதவிகளைப் பெற்றுக்கொள்ளுமாறு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது. அனைத்து அரசாங்க பாடசாலைகளும், எதிர்வரும் புதன்கிழமை (26) ஆரம்பிக்கப்படவுள்ளது. முஸ்லிம் பாடசாலைகள், கடந்த 19ஆம் திகதி, இரண்டாம் தவணைக்காக ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
Related posts:
அத்துமீறிப் பிரவேசிக்கும் இந்திய இழுவைப் படகு உரிமையாளர்கள் மீது வழக்குப் பதிவு செய்து நஷ்டஈடுகள் பெ...
ஜனவரியில் உள்ளூராட்சி தேர்தல் - தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானம்!
ஊரடங்கை மீறிய குற்றத்தில் இதுவரை 66 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கைது - 8 ஆயிரத்து 671 பேருக்கு தண்டனை...
|
|