பாடசாலைகளுக்கு மாணவர்களை அனுப்பவேண்டாம் – கல்வி அமைச்சு அதிரடி உத்தரவு!

தற்போது தென் மாகாணத்தில் பரவிவரும் வைரஸ் நோய் காரணமாக மாகாண கல்வி அமைச்சு பெற்றோர்களுக்கு சிறப்பு அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது.
இதன்பிரகாரம் மாணவர்களுக்கு காய்ச்சல் மற்றும் தடிமல் காணப்படுமாயின் , அவர்களை பாடசாலைக்கு அனுப்ப வேண்டாம் என மாகாண கல்வி அமைச்சு பெற்றோருக்கு அறிவித்துள்ளது.
இதேவேளை, பரவிவரும் நோய் தொடர்பில் நாளைய தினம தொற்று நோய் பிரிவு குழுவொன்று குறித்த பகுதிகளில் தளஆய்வினை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தற்போது நாட்டின் பல பாகங்களிலும் மழை பெய்து வருவதால் காய்ச்சல் மற்றும் தொற்று நோய் பரவக் கூடிய நிலையும் ஏற்பட்டுள்ளது.
Related posts:
உள்ளூராட்சி சபைகளின் பொறுப்புகள் இன்று முதல் உள்ளூராட்சி ஆணையாளர்களிடம்!
காக்கை தீவவில் ஆயுதங்கள் மீட்பு - யாழ்ப்பாணத்தில் பதற்றம்!
வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்த்தன - பங்காளதேஷ் உயர்ஸ்தானிகரிடையே விசேட சந்திப்பு – தொழில்நுட்பத்தை ...
|
|