பாடசாலைகளுக்கு செல்லாத சிறுவர்களுக்கு சான்றுபெற்ற பாடசாலையில் தொழிற்பயிற்சி!
Sunday, January 14th, 2018பாடசாலைகளுக்கு செல்லாத மற்றும் ஒழுங்கற்ற வரவுகளைக் கொண்ட 11 சிறுவர்கள் பிடிக்கப்பட்டு நீதிமன்றக் கட்டளைக்கு அமைவாக மூன்று சிறுவர்களை சான்று பெற்ற பாடசாலையில் வைத்து தொழிற்பயிற்சி வழங்குமாறும் ஏனைய எட்டு சிறுவர்களின் பெற்றோர்கள் கடுமையாக எச்சரிக்கை செய்யப்பட்டும் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
கிளிநொச்சி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் பாடசாலைகளுக்குச் செல்லாத, பாடசாலைகளை விட்டு இடைவிலகிய மற்றும் ஒழுங்கற்ற வரவுகளைக் கொண்ட சிறுவர்களை மீளப் பாடசாலைகளில் இணைத்துக் கொள்ளுதல் மற்றும் தொழில்சார் கற்கை நெறிகளை வழங்குதல் போன்ற செயற்பாடுகளை தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
கடந்த ஆண்டில் கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்றத்திற்கு அமைவாக நூற்றுக்கு மேற்பட்ட சிறுவர்கள் இவ்வாறு மீளக்கற்றலில் இணைக்கப்பட்டுள்ளனர்.
இதன் தொடர்ச்சியாக 2018 ஆம் ஆண்டில் முதல்முறையாக மாவட்ட சிறுவர் நன்னடத்தை திணைக்களம் சிறுவர் அபிவிருத்தி அதிகார சபை மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் இணைந்து நேற்றுமுன்தினம் கிளிநொச்சி கண்டாவளை பிரதேசசெயலர் பிரிவின் கீழ் உள்ள ஊரியான், கோரக்கன்கட்டு, பிரமந்தனாறு, புன்னைநீராவி ஆகிய பகுதிகளில் பாடசாலைகளுக்குச் செல்லாத 11 சிறுவர்கள் பிடிக்கப்பட்டு கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்றில் நீதிமன்ற நீதிவான் ஏ.ஆனந்தராஜா முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து 8 சிறுவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் கடுமையாக எச்சரிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டதுடன் 3 சிறுவர்களை அச்சுவேலியிலுள்ள சான்று பெற்ற பாடசாலையில் வைத்து தொழில் பயிற்சிகளை வழங்குமாறும் நீதிவான் நீதிமன்றம் கட்டளையிட்டுள்ளது.
Related posts:
|
|