பாடசாலைகளுக்காக பெற்றோரும் பணம் சேகரிப்பதற்குத் தடை – கல்வி அமைச்சர்!

Thursday, February 7th, 2019

பாடசாலைகளுக்காக பெற்றோர்களும் பணம் சேகரிக்க முடியாதவாறு நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாக அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

பாடசாலைகளில் பணம் அறவிடப்படுவது தொடர்பாக 2015ஃ05 ஆம் இலக்க சுற்றுநிருபமொன்று வெளியிடப்பட்டிருந்தது. இதன்படி பாடசாலையில் ஏதேனும் தேவைக்காக பணம் அறவிடுவதென்றால் வருட ஆரம்பத்திலேயே அது தொடர்பான அனுமதியைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற நடைமுறை இருந்தது. இருப்பினும் அதற்கும் அப்பால் பணம் அறவிடும் செயற்பாடுகள் இடம்பெற்றுள்ளன.

அதிபர்கள் நேரடியாகத் தொடர்புபடாவிட்டாலும் பெற்றோர்களினாலும் பணம் சேகரிக்கப்படுகின்றன. அந்தப் பணத்தை அதிபரால் பெற்றுக்கொள்ளவோ பாடசாலைக்காக செலவழிக்கவோ முடியாது. இவ்வாறாகப் பணம் சேகரிப்பது தொடர்பான நடவடிக்கையெடுக்கப்பட வேண்டும்.

இதன்படி இது தொடர்பாக குழுவொன்றை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அந்தக் குழுவின் அறிக்கை கிடைத்த பின்னர் நடவடிக்கைகள் எடுக்கப்படும். தற்போது நாங்கள் பாடசாலைகளுக்குத் தேவையான வசதிகளை வழங்குகின்றோம். இதனால் வெளியில் பணம் சேகரிக்க வேண்டிய தேவை கிடையாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related posts: