பாடசாலைகளில் நிலவும் குறைபாடுகள் தொடர்பில் அறிக்கை தருமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ கோரிக்கை!

Monday, July 6th, 2020

பாடசாலைகளில் நிலவும் குறைபாடுகள் குறித்து முழுமையான அறிக்கையொன்றை தனக்கு வழங்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

பொலன்னறுவை அத்தனகடவல பிரதேசத்தில் நேற்றையதினம் இடம்பெற்ற கூட்டமொன்றில் கருத்து தெரிவிக்கும் போதே ஜனாதிபதி இதனைத் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த சந்திப்பின்போது பொலன்னறுவை மாவட்ட பிரதேசங்களில் உள்ள பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் மற்றும் ஏனைய குறைபாடுகள் குறித்து மக்கள், ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு சென்றனர்.

அது தொடர்பாக கவனம் செலுத்திய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ, பாடசாலைகளில் நிலவும் குறைபாடுகள் குறித்து முழுமையான அறிக்கையொன்றை தனக்கு வழங்குமாறு முன்னாள் இராஜாங்க அமைச்சர் ரொஷான் ரணசிங்கவிடம் தெரிவித்துள்ளார்.

மேலும் சிறியளவில் இரத்தினக்கல் அகழ்வில் ஈடுபட்டுள்ள எலஹெர மக்களுக்கு சுற்றாடலுக்கு பாதிப்பில்லாத வகையில் தமது தொழிலை முன்னெடுக்குமாறு ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: