பாடசாலைகளில் நிகழ்ச்சிகளை நடத்த மறு அறிவித்தல் வரை தடை – கல்வி அமைச்சு!

பாடசாலைகளில் நிகழ்ச்சிகளை நடத்துதற்கு மறு அறிவித்தல் வரை தடை விதிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் காரணமாகவே இவ்வாறு நிகழ்ச்சிகளை நடத்துதற்கு மீள் அறிவித்தல் வரை தடை விதிக்கப்பட்டுள்ளதாக கல்வியமைச்சு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இவ்விடயம் தொடர்பாக அனைத்து மாகாண, வலயக் கல்விப் பணிப்பாளர்கள் மற்றும் பாடசாலை அதிபர்களுக்கும் கல்வியமைச்சின் செயலாளரினால் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Related posts:
சகோதரனுடன் சண்டையிட்டு வீட்டை விட்டுச் சென்ற சிறுவன் - சிறுவர் நன்னடத்தை பராமரிப்பு திணைக்களத்திட...
இலத்திரனியல் சிகரட்கள் பறிமுதல்!
ஆளுநரின் தீர்மானத்தை நடைமுறைப்படுத்த தவறும் தூர சேவையில் ஈடுபடும் பேருந்துகள் மீது சட்ட நடவடிக்கை - ...
|
|