பாடசாலைகளில் இடைநிறுத்தப்பட்டுள்ள அனைத்து அபிவிருத்தி பணிகளையும் விரைவாக நிறைவு செய்யுங்கள் – துறைசார் அதிகாரிகளுக்கு ஜனாதிபதி பணிப்பு!

Sunday, January 17th, 2021

நாட்டின் அனைத்து பாடசாலைகளிலும் இடைநிறுத்தப்பட்டுள்ள அனைத்து அபிவிருத்தி பணிகளையும் விரைவாக நிறைவு செய்யுமாறு ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச துறைசார்  அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

பொலன்னறுவை மெதிரிகிரிய, வெடிகச்சிய கிராமத்தில் நடைபெற்ற “கிராமத்துடன் உரையாடல்” நிகழ்ச்சியில் பங்கேற்றபோதே ஜனாதிபதி இவ்வாறு பணிப்புரை விடுத்துள்ளார்.

அத்துடன் க.பொ.த உயர்தர பரீட்சை எழுதிய மாணவர்களுக்கு தொழில் பயிற்சி வாய்ப்புகளை உருவாக்க வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி வலியுறுத்தினார். இது தொடர்பில் குறித்த துறைக்கு பொறுப்பான இராஜாங்க அமைச்சருக்கு தெரியப்படுத்தி தொழில் பயிற்சி வாய்ப்புகள் உருவாக்கப்படும் என்றும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

இதனிடையே மின்சார கட்டணங்களை செலுத்த முடியாத பாடசாலைகள் மற்றும் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு “சூரிய மின் சக்தி முறைமையை” இலவசமாக வழங்குமாறும் இதன்போது ஜனாதிபதி மின்சாரத்துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: