பாடசாலைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக 480 மில்லியன் வழங்கப்பட்டது – கல்வி அமைச்சின் செயலாளர் தெரிவிப்பு!

Tuesday, November 24th, 2020

பாடசாலைகளில் விசேட வசதிகளை அமைப்பதற்கும் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் பாடசாலைகளுக்கு போதுமான நிதி வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் பேசிய அவர், நாடு முழுவதும் உள்ள 10 ஆயிரத்து 165 பாடசாலைகளுக்கு 480 மில்லியன் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

ஓகஸ்ட் மாதத்திலிருந்து சில பாடசாலைகளுக்கு தலா 110,000 வரை வழங்கப்பட்டதாகவும் கல்வி அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் ஒரு சில பாடசாலைகள் சுகாதார அதிகாரி ஒப்புதல் அளிக்கும்வரை மீண்டும் திறக்க அனுமதிக்கப்படாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தற்போது முடக்கப்பட்டிருக்கும் பகுதிகளில் பாடசாலைகளை மீண்டும் திறக்கும்போது கடுமையான நெறிமுறைகள் பின்பற்றப்படும் என்றும் கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: