பாடசாலைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த மற்றுமொரு விசேட சுற்றறிக்கை வெளியீடு!

Thursday, May 2nd, 2019

மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் பாதுகாப்பை உறுதிசெய்வதற்காக, கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசத்தின் ஆலோசனையின் பேரில் விசேட சுற்றறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

பாடசாலைகளின் பாதுகாப்பு குறித்து கல்வி அமைச்சரினால், முன்னதாக ஒரு சுற்றறிக்கை வெளியிடப்பட்டிருந்த நிலையில், 25/2019 என்ற விசேட சுற்றறிக்கை, நாட்டிலுள்ள அனைத்து பாடசாலைகளின் அதிபர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு குழுவை நிறுவுதல், பாதுகாப்பு தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்ளல் மற்றும் மாணவர்கள், பெற்றோர்கள், பழைய மாணவர்கள் ஆகியோரை தெளிவுபடுத்தல் என்பன குறித்து இந்த சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பாடசாலைகளின் நுழைவாயில் பகுதியில் பாதுகாப்பை உறுதிப்படுத்துதல், மாணவர்களின் பாடசாலையை பையை சோதனைக்கு உட்படுத்துதல் மற்றும் அவர்களின் அடையாளங்களை உறுதிப்படுத்துதல், விடுதிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துதல் உள்ளிட்ட 18 விடயங்கள் இந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts: