பாடசாலைகளின் நேரம் ஒரு மணித்தியாலத்தால் அதிகரிப்பு – 139 நாட்கள் பாடசாலை கற்றல் செயற்பாடுகள் இடம்பெற வேண்டு என கல்வியமைச்சு விசேட அறிவிப்பு!

Saturday, April 2nd, 2022

2022 இல் அரச மற்றும் அனுமதி பெற்ற தனியார் பாடசாலைகளின் நேரம் ஒரு மணித்தியாலத்தால் அதிகரிக்கப்பட்டு, 139 நாட்கள் பாடசாலை கற்றல் செயற்பாடுகள் இடம்பெற வேண்டுமென கல்வியமைச்சு அறிவித்துள்ளது.

இதேவேளை, கல்விப் பொதுதராதர உயர்தரப் பரீட்சை ஒக்டோபர் மாதமும், கல்விப் பொதுதராதர சாதாரணத்தரப் பரீட்சை 2023 ஆம் ஆண்டு முற்பகுதியிலும் இடம்பெறுமென அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

இதனிடையே நீண்ட மின் தடையால் பாடசாலை மாணவர்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளமையால், ஏப்ரல் 4 ஆம் திகதிமுதல், முன்கூட்டிய விடுமுறையை அறிவிக்குமாறு கல்வி அமைச்சுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவினால், இந்தப் பரிந்துரை முன்வைக்கப்பட்டுள்ளதாக, அதன் தலைவர் ஜனக்க ரத்நாயக்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts:

ஏப்ரல் 21 பயங்கரவாத தாக்குதலின் முதலாவது ஆண்டு நினைவு நாள் நாளை அனுஷ்டிப்பு: உயிர்த்த ஞாயிறு தாக்குத...
சர்வதேச ரீதியிலான அவசர நிலையில் நாட்டின் பொருளாதாரத்தை பாதுகாக்கும் நடவடிக்கையே, அவசரமற்ற பொருட்களுக...
இன்றுமுதல் ஒன்லைனில் ரயில் பயண சீட்டுகளை வழங்க நடவடிக்கை - இலங்கை ரயில்வே சேவையின் பொது முகாமையாளர் ...