பாடசாலைகளின் சுற்றாடல்களை அண்மித்து போதைப்பொருள் விற்பனையைத் தடுக்க முறையான திட்டத்தைத் தயார்ப்படுத்தவும் – பொலிஸாருக்கு அரசதலைவர் பணிப்பு

Saturday, January 12th, 2019

பாடசாலைச் சூழலில் இடம்பெறும் பல்வேறு வகையான போதைப்பொருள் விற்பனை நடவடிக்கைகளை முற்றாக இல்லாதொழிப்பதற்கு முறையான நிகழ்ச்சித் திட்டமொன்றை நடைமுறைப்படுத்துங்கள். அனைத்துத் தரப்பினரினதும் பங்களிப்புடன் அதை நடைமுறைப்படுத்துங்கள் என்று மைத்திரிபால சிறிசேன சம்பந்தப்பட்ட தரப்பினருக்குப் பணித்துள்ளார்.

அதற்குத் தேவையான சட்ட திருத்தங்களை விரைவாக மேற்கொண்டு நடைமுறைப்படுத்துமாறும் மைத்திரி அதிகாரிகளுக்குத் தெரிவித்துள்ளார்.

பாடசாலைச்சூழலில் இடம்பெறும் பல்வேறு வகையான போதைப்பொருள்  வியாபாரம் மற்றும் மாணவர்கள் அவற்றுக்கு அடிமையாவது பற்றிய பல்வேறு தகவல்கள் தமக்குக் கிடைத்திருப்பதாகக் குறிப்பிட்ட அவர் இந்த நாசகார நடவடிக்கைகள் தலைதூக்குவதற்கு இடமளிக்க வேண்டாமென்றும் பணிப்புரை விடுத்துள்ளார்.

சட்டவிரோத போதைப்பொருள்களைக் கட்டுப்படுத்துவதற்காக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளதுடன் சுற்றிவளைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான நிகழ்ச்சித் திட்டங்களை பலப்படுத்தி உரிய சட்டதிட்டங்களை திருத்தும் நடவடிக்கைகளும் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அனைத்துச் சட்ட திருத்தங்களையும் விரைவாக மேற்கொண்டு உரிய அதிகாரங்களை வழங்க நடவடிக்கை எடுக்குமாறும் அவர் அதிகாரிகளுக்குப் பணித்துள்ளார்.


அமெரிக்க டொலருக்கு எதிராக ரூபவின் பெறுமதியில் பாரியளவில் வீழ்ச்சி!
வெளிமாவட்ட அசிரியர்களுக்கு உரிய வசதிகளை ஏற்படுத்தவும் - இலங்கை ஆசிரியர் சங்கம் கோரிக்கை!
தலசீமியா நோய்க் காவிகளை இனங்காணும் வேலைத்திட்டம்!
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை நாளையுடன் குறைவடையும்!
15,000 ஹெக்டயரில் பச்சை மிளகாய் செய்கையை அதிகரிக்க விவசாய அமைச்சு நடவடிக்கை!