பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் வரையறுக்கப்பட்ட வகையில் ஆரம்பம் – கொரோனா தொற்று அகலும் வரை இந்த நடைமுறை தொடரும் என கல்வி அமைச்சு தெரிவிப்பு!

Monday, August 10th, 2020

நாட்டின் அனைத்து பாடசாலைகளிலும் கல்வி நடவடிக்கைகளை இன்றுமுதல் மீண்டும் ஆரம்பமாகியுள்ளன..

முதலாம் தரம்முதல் 10 ஆம் தரம் வரையான மாணவர்களுக்கு இன்றுமுதல் பல கட்டங்களின் கீழ் பாடசாலைளை ஆரம்பிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

அத்துடன் நாளையதினம் இரண்டாம் மற்றும் 5 ஆம் தர மாணவர்கள் மாத்திரமே அனுமதிக்கப்படுவர்.

இதேவேளை, 200 மாணவர்களுக்கு கூடுதலாக உள்ள பாடசாலைகளின் ஆரம்பப் பிரிவு கல்வி நடவடிக்கைகள் கட்டம் கட்டமாக ஆரம்பிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் கொரோனா தொற்று கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு உறுதிப்படுத்தும் வரை இந்த நடைமுறை அமுலில் இருக்கும் என்று கல்வி அமைச்சின் மேலதிக செயலாளர் ரஞ்சித் சந்திரசேகர தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: