பாக்குநீரிணையை இரு முறை நீந்திக் கடந்து சாதனை படைத்த இலங்கை விமானப் படைவீரர்!

Sunday, April 11th, 2021

தலைமன்னாரில் இருந்து தனுஷ்கோடி வரை பாக்கு நீரிணையை நீந்தி கடந்து மீள திரும்பிய இரண்டாம் நபர் என்ற சாதனையை இலங்கை விமானப்படையின் ரொஷான் அபேசுந்தர தனதாக்கியுள்ளார்.

அவர், குறித்த சாதனையை 28 மணி 19 நிமிடங்கள் 58 விநாடிகளில் பதிவு செய்துள்ளார்.

மாத்தறை மத்திய மகா வித்தியாலத்தின் பழைய மாணவரான ரொஷான் அபேசுந்தர 2008ஆம் ஆண்டு விமானப்படையில் இணைந்தார்.

அவர் கடந்த மார்ச் மாதம் 21ஆம் திகதி 49 கிலோமீற்றர் கடல் பயணத்தை 23 மணிநேரத்தில் கடந்து தேசிய சாதனையை பதிவு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதற்குமுன்னர் 1971ஆம் ஆண்டு குமார் ஆனந்தன் என்பவர் பாக்கு நீரிணையை நீந்தி கடந்து மீள திரும்பிய முதலாவது இலங்கையர் என்ற சாதனையை படைத்தார்.

அத்துடன்,கடந்த மார்ச் 19ஆம் திகதி தலைமன்னாரில் இருந்து தனுஷ்கோடி வரை நீந்தி கடந்து சென்று இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த 48 வயதான ஆசிரியர் ஒருவரும் சாதனை படைத்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

Related posts: