பாகுபாடுகள் வேண்டாம்: சட்டம் அனைவருக்கும் சமமானது – யாழ் மாநகரசபையில் ஈ.பி.டி.பி வலியுறுத்து!

Friday, September 28th, 2018

மாநகரசபையின் வருமானம் அதிகரிக்கப்பட வேண்டும் என்பதற்காக அப்பாவி மக்களது உடமைகள் உடைக்கப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்பதுடன் சட்டம் அனைவருக்கம் சமமானதாக அமையவேண்டும் என்றும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ் மாநகரசபை உறுப்பினரும் பிரபல சட்டத்தரணியுமான றெமீடியஸ் வலியுறுத்தியுள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில் –

இன்றையதினம் யாழ் மாநகர சபையின் மாதாந்த அமர்வு முதல்வர் தலைமையில் சபையின் மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. இதன்போதே அவர் இவ்வாறு வலியுறுத்தினார்

இது தொடர்பில் மேலும் அவர் தெரிவிக்கையில் –

யாழ்ப்பாணம் மாநகர சபையின் கரையோர பகுதிகளில் சபையின் அனுமதி இன்றி பல குடியிருப்புக்கள் மதில்கள் என கட்டப்பட்டுள்ளது. ஆனாலும் தற்போது சபை அவற்றை சட்டரீதியாக அணுக முயல்வதால் அவை உடைக்கப்படும் சாத்தியக் கூறுகள் காணப்படுகின்றது.

இதனால் அப்பாவி மக்கள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. இந்நிலையில் சட்டத்தை அமுல்படுத்துவதானால் அனைத்து மக்களையும் ஒரே பார்வையில் பார்க்க வேண்டும். ஆனால் அவ்வாறு இங்கு நடைபெறவில்லை. ஒருசாரார் கட்டுவதை கண்டும் காணாதிருக்கும் தொழில் நுட்ப உத்தியோகத்தர்கள் அப்பாவி மக்கள் பலரது கட்டடங்களை உடைக்க முயல்வதை பாரக்கும்போது சந்தேகம் எழுகின்றது.

எனவே யாராக இருந்தாலும் சட்டம் சமனானதாக இருக்கவேண்டும் என்பதுடன் பாகுபாடுகள் காட்டி மக்களின் இயல்பு வாழ்க்கையை பாதிக்கவேண்டாம் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

Related posts: