பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சரின் இலங்கை விஜயம் இரத்து!

Friday, May 3rd, 2019

இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவிருந்த பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ஷா மெஹ்மூத் குரேஷியின் விஜயம் இரத்துச் செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றன.

கடந்த மாதம் இலங்கையில் இடம்பெற்ற தாக்குதல்களைத் தொடர்ந்து பாதுகாப்பு காரணங்களின் நிமித்தமே அவரது விஜயம் தவிர்க்கப்பட்டிருக்கிறது.

இலங்கை அரசாங்கத்தின் அழைப்பின் பேரிலேயே பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் அரசுமுறை விஜயமாக இவ்வாரம் இலங்கை வரவிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்தநிலையில் அவரின் விஜயத்துக்கான திகதி பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts: