பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் நாளை இலங்கைக்கு வருகை – இருதரப்பு புரிந்துணர்வு ஒப்பந்தத்திலும் கைச்சாத்து!

Monday, February 22nd, 2021

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் அழைப்பை ஏற்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நாளை இலங்கைக்கு வருகைதரவுள்ளார்.

பாகிஸ்தான் பிரதமர் தமது விஜயத்தின் போது, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோருடன் இருதரப்பு சந்திப்புக்களில் கலந்து கொள்ளவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.

அத்துடன் வரத்தகம், முதலீடு மற்றும் விளையாட்டு இராஜதந்திர முயற்சிகள் உட்பட பல விடயங்கள் தொடர்பான உயர்மட்ட கலந்துரையாடல்களையும் இதன்போது நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளன.

உத்தியோகபூர்வ பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து, நாளை அலரி மாளிகையில் இடம்பெறவுள்ள இருதரப்பு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் நிகழ்விற்கு இலங்கை மற்றும் பாகிஸ்தான் பிரதமர்கள் இருவரும் தலைமை தாங்குவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: