பாகிஸ்தானிய கடற்படை கப்பல்கள் இலங்கை வருகை!

Wednesday, January 4th, 2017

நல்லெண்ண விஜயமொன்றை மேற்கொண்டு பாகிஸ்தான் கடற்படை பாதுகாப்பு கப்பல்கள்கொழும்பு துறைமுகத்திற்கு வருகை தரவுள்ளன என கொழும்பில் உள்ள பாகிஸ்தான்உயர்ஸ்தானிகரலாயம் தெரிவித்துள்ளது.

இலங்கை-பாகிஸ்தான் கடற்படைக்கு இடையிலான உறவை வலுப்படுத்தும் நோக்கிலேயேகுறித்த கப்பல்கள் இலங்கை வருகை தரவுள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த கப்பல்கள் இரண்டும் எதிர்வரும் வியாழக்கிழமை கொழும்பு துறைமுகத்தைவந்தடையும் என குறிப்பிடப்பட்டுள்ளது. பாகிஸ்தானிய கப்பல்கள் இரண்டும் நான்கு நாட்கள் கொழும்பு துறைமுகத்தில்தங்கியிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ships

Related posts: