பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கைது!

Wednesday, May 10th, 2023

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், துணை ராணுவப் படையினரால் கைது செய்யப்பட்டதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

ஊழல் வழக்கு தொடர்பில், இஸ்லாமாபாத்தில் உள்ள நீதிமன்ற வளாகத்தில் வைத்து இம்ரான கான் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

“இம்ரான் கானின் மகிழுந்து சுற்றி வளைக்கப்பட்டது” என்று இம்ரான் கானின் உதவியாளர் ஃபவாத் சவுத்ரி கைது செய்யப்பட்டதை உறுதிப்படுத்தாமல் கூறினார்.

பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் (பி.டி.ஐ) கட்சியால் பகிரப்பட்ட கைது காட்சிகள், பாதுகாப்பு பிரிவினரால் இம்ரான் கான் வேனில் ஏற்றப்படுவதை காட்டுகின்றன.

கடந்த ஆண்டு ஏப்ரலில் நடைபெற்ற நாடாளுமன்ற நம்பிக்கை வாக்கெடுப்பையடுத்து அவர் ஆட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

அதனைத் தொடர்ந்து அவர் மீது பதிவு செய்யப்பட்ட 100க்கும் மேற்பட்ட வழக்குகளில் இந்த ஊழல் வழக்கும் ஒன்றாகும்.

இம்ரான் கானை அவரது லாகூர் வீட்டில் இருந்து கைது செய்வதற்கான முந்தைய முயற்சிகள் அவரது ஆதரவாளர்களுக்கும் சட்ட அமுலாக்கப் பிரிவினருக்கு இடையே கடும் மோதல்களை ஏற்படுத்தியமை குறிப்பிடத்தக்கது

Related posts:

பொதுமக்கள் பயன்பாட்டு ஆணைக்குழுவிற்கு பதிலாக புதிய வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படும் – அமைச்சர் கெஹெல...
உயர்தரப் பரீட்சையின் முடிவுகள் மார்ச் மாதத்தின் இறுதிப் பகுதியில் வெளியிடப்படும் - கல்வி அமைச்சர் பே...
வருடம் முழுவதும் தடையின்றி எரிபொருளை வழங்க தேவைப்படும் பெருந்தொகை டொலரை பெறுவது தொடர்பில் விசேட ஆலோச...