பஸ் கட்டண அதிகரிப்பு தொடர்பாக பஸ் சங்கங்களுடன் பேச்சுவார்த்தை

Wednesday, June 14th, 2017

பஸ் கட்டணங்களை அதிகரிக்கும் யோசனை தொடர்பில் பஸ் சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் எம்.ஏ.பி.ஹேமசந்திர தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் எந்தத் தீர்மானமும் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை .ஒவ்வொரு வருடமும் ஜூலை மாதம் முதலாம் திகதி பஸ் கட்டணங்களை திருத்தி அமைப்பது தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்துவது வழமையான விடயமாகும். இது தொடர்பாக பஸ் சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி போக்குவரத்து அமைச்சர் ஊடாக சம்பந்தப்பட்ட யோசனைகளை அமைச்சரவைக்கு சமர்ப்பிக்க எதிர்ப்பார்த்துள்ளதாக திரு ஹேமசந்திர குறிப்பிட்டார்.

அமைச்சரவையில் மேற்கொள்ளப்படும் தீர்மானம் மற்றும் அரசாங்கத்தின் ஆலோசனைக்கு அமைய எதிர்கால நடவடிக்கை மேற்கொள்ளப்படும். பஸ் கட்டணங்களை அதிகரிப்பது தொடர்பில் தீர்மானங்களை மேற்கொள்ளும் வல்லமை போக்குவரத்து ஆணைக்குழுவிற்கு இல்லை என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

Related posts: