பழைய பாலம் அகற்றி சீராக்கம்!

Tuesday, September 25th, 2018

ஏ9 வீதியில் கைதடியில் அமைக்கப்பட்ட புதிய பாலம் மக்கள் பாவனைக்குத் திறந்து விடப்பட்டதையடுத்து அங்கிருந்த இரும்புப்பாலம் அகற்றப்பட்டு நிலம் வெள்ளம் வழிந்தோடக்கூடியதாக சீராக்கப்படுகின்றது.

1837 ஆம் ஆண்டு ஒல்லாந்தர் காலத்தில் முருகைக் கற்களால் அமைக்கப்பட்ட பாலம் 2000 ஆம் ஆண்டில் அதிசக்தி வாய்ந்த குண்டு வைத்துத் தாக்கப்பட்டதையடுத்து முதன்மைச் சாலை ஊடான போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. பின்னர் தற்காலிக பாதை அமைக்கப்பட்டு வாகனங்கள் பயணித்தன. 2004 ஆம் ஆண்டு தற்காலிகமாக இரும்புப்பாலம் அமைக்கப்பட்டு பொதுமக்களின் பாவனைக்கு விடப்பட்டிருந்தது.

இந்தப் பாலத்தில் கனதிகூடிய தகடுகள் போடப்பட்டன. வாகனங்கள் மழை காலங்களிலும் வாகனங்களிலிருந்து தகரத்தில் எண்ணெய் சிந்தும் வேளைகளிலும் விபத்துகளுக்கு உள்ளாகின. இரும்புத் தகடுகளும் உக்கி வந்துள்ளன. புதிய பாலம் அமைக்கும் பணிகள் 2016 இல் ஆரம்பித்து கடந்த ஓகஸ்ட் மாதம் பொதுமக்களின் பாவனைக்கு விடப்பட்டது. இதனையடுத்து முன்னர் அமைக்கப்பட்டிருந்த இரும்புப் பாலம் அகற்றப்பட்டு அந்த இடம் தண்ணீர் வழிந்தோடக்கூடியதாகச் சீராக்கப்படுகிறது.

Related posts: