பழைமைவாய்ந்த யாழ்ப்பாண ஆரியகுளம் துப்புரவு செய்யப்படுமா? – மக்கள் கேள்வி!

யாழ்ப்பாணம் மாநகரசபைக்குட்பட்ட ஆரியகுளம் எனப்படும் மிகப் பழமை வாய்ந்த குளம் குப்பைகள் மிதந்த வண்ணம் அசிங்கமாக காட்சியளிக்கின்றது. அதைத் துப்புரவு செய்வதற்கு யாழ்ப்பாணம் மாநகர சபை முன்வர வேண்டும் என்று பொது மக்கள் கேட்டுக் கொண்டனர்.
இது தொடர்பாக மேலும் தெரிவித்த மக்கள்
ஆரியகுளத்தை அண்டிய பகுதியில் கல்விக்கூடங்களும் கல்வி நிலையங்களும் காணப்படுகின்றன.
தாமரைக் கொடிகள் பரந்த வண்ணம் உள்ள இந்தக் குளத்தின் ஒரு பகுதியில் பொலித்தீன் பைகள், கடதாசிகள், மற்றும் பல போத்தல்கள் என மிதந்து அசிங்கமாகக் காட்சியளிக்கின்றது.
இவ்வாறு பராமரிப்பின்றிக் குறித்த குளம் காணப்படுவதால் அதில் இருந்து நுளம்பு பெருகுவதற்கு வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.
குளத்தில் மிதக்கும் பொலித்தீன் பைகளிலும் பிளாஸ்ரிக் போத்தல்களிலும் நுளம்புகள் முட்டையிட்டுப் பெருகுவதற்கு வழிகள் ஏற்படும். அந்தவிடத்தில் குப்பை போட வேண்டாம் என்று அறிவுறுத்தல் பலகை இடப்பட்டிருந்தும் குப்பைகள் குளத்தினுள் இடப்படுகிறது. காரணம் அறிவுறுத்தல் பலகை இடப்பட்டிருந்தும் குப்பைதொட்டி எதுவும் காணப்படவில்லை எனவே இது தொடர்பில் மாநகர அதிகாரிகள்உரிய கவனமெடுத்து நகரிலுள்ள முதன்மையான குளம் ஒன்று இவ்வாறு படுமோசமாகக் காணப்படுவதை சீர் செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதனிடையே யாழ்ப்பாண மாநகர ஆணையாளள் உடனடியாக அந்தக் குப்பைகள் அகற்றப்பட்டு குளம் தூய்மையாக்கப்படும் என்று தெரிவித்த நிலையில் ஒருவாரமாகியும் இன்னும் நிலையில் குளத்தில் குப்பைகள் அகற்றப்படவில்லை என்று தெரிவிக்கும் மக்கள் துப்புரவு செய்யப்படாததன் வெளிப்பாடானது யாழ் மாநகரின் அட்சியாளர்களதும் அதிகாரிகளுடைய மெத்தனப் போக்கையே காட்டுகின்றது என்று மக்கள் கவலை தெரிவித்தனர்.
Related posts:
|
|