பழிவாங்கும் நோக்குடனான அரச பணியாளர்களது இடமாற்றங்கள் மக்களுக்கு நன்மை கொடுக்காது – ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் ஈ.பி.டி.பியின் யாழ் மாவட்ட நிர்வாக செயலாளர் பாலகிருஸ்ணன் !

Saturday, January 30th, 2021

அரச பணியாளர்களது இடமாற்றங்களில் பக்கசார்புகளும் பாரபட்சங்களும் இருப்பதால் பல அரச பணியாளர்கள் பாதிக்கப்படுவதாக சண்டிலிப்பாய் பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் சுட்டிக்காட்டியுள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் பிரதிநிதியும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ் மாவட்ட நிர்வாக செயலாளருமான சிவகுரு பாலகிருஸ்ணன் இவ்வாறான நிலைமைகள் தொடாராதவண்ணம் இருக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

நேற்றையதினம் சண்டிலிப்பாய் பிரதேசத்தின் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் இணைத்தலைவர் அங்கயன் இராமநாதன் தலைமையில் நடைபெற்றது. இதன்போதுபிரதேசத்தின் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் ஆராயப்பட்டன. இதன்போதே குறித்த விடயம் தொடர்பில் சிவகுரு பாலகிருஸ்ணன் சுட்டிக்காட்டியிருந்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில் –

தற்போது பல அரச உததியோகத்தர்களது இடமாற்றங்கள் அரசியல் பழிவாங்கல்களாகவே மேற்கொள்ளப்பட்டு வருவதாக பலதரப்பினரிடமிருந்தும் குற்றச்சாட்டுக்கள் வருகின்றன. குறிப்பாக ஒரே இடத்தில் பல வருடங்கள் பணியாற்றும் பலருக்கு எதுவித இடமாற்றங்களும் வழங்கப்படாது அண்மையில் இடமாற்றம் பெற்று வந்தவர்களுக்கே மீண்டும் இடமாற்றம் வழங்கி அவர்களை அசௌகரியங்களுக்கு உள்ளாக்குவதாகவும், இவை ஒருதரப்பினரது விருப்பு வெறுப்புகளுக்கு அமையவே மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் சுட்டிக்காட்டப்படகின்றது.

இந்தநிலை மாற்றம்பெற்று அரச அதிகாரிகளை அவர்களது பணிகளை இடையூறுகள் இன்றி மேற்கொள்ள நடவடிக்கை மேதற்கொள்ளப்பட வெண்டும் எனவும் சுட்டிக்காட்டியிரந்தார்.

அத்துடன் கல்லுண்டாய் குப்பை மேட்டு பகுதியில் திண்ம கழிவகற்றலால் எதிர்கொள்ளப்படும் சுற்றுச் சூழல் சார் பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்பட பொறிமுறை ஒன்று உருவாக்கப்பட வேண்டும் என வலியுறுத்தியதுடன்  அப்பகுதியில் காணப்படும் கட்டாகாலி நாய்கள் தொடர்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார்.

Related posts: