பழிவாங்கலால் பாதித்தோருக்குச் சலுகை – அமைச்சரவை ஒப்புதல்!
Thursday, February 16th, 2017
கடந்த காலங்களில் அரசியல் பழிவாங்கல் காரணமக பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்தவர்களுக்கு சலுகைகள் வழங்குவதற்காக அரசு தீர்மானித்துள்ளது. இதற்காக சமர்ப்பிக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
2015ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 17ஆம் திகதி, வெளியிட்ட சுற்றறிக்கைக்கு அமைவாக அரசியல் பழிவாங்கல்களினால் பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து 31,666 மேன்முறையீடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. இதில் 23,93 மேன்முறையீடுகள் தொடர்பான சிபாரிசுக்கு 3 கட்டங்களின் கீழ் அமைச்சரவை அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எஞ்சிய 8,573 மேன்முறையீடுகளில் 6 அமைச்சுக்களுக்கு உரித்தான 3,440 மேன்முறையீடுகள் தொடர்பான பரிந்துரைகளை உரிய நிர்வாக அதிகாரிகளின் ஊடாகச் செயற்படுத்துவது தொடர்பில் அரச நிர்வாக மற்றும் முகாமைத்துவ அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டாராவினால் சமர்ப்பிக்கப்பட்ட அமைச்சரவைப் பத்திரத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
Related posts:
|
|