பழங்களுடன் தொடர்புடைய உற்பத்திக்காக வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு வரி – அமைச்சர் மகிந்த அமரவீர!

Sunday, September 30th, 2018

வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அதிக வரியினை அறவிட நடவடிக்கை எடுக்கப்படும் என விவசாயத்துறை அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

அதன்படி, அதுதொடர்பில் தனக்கு அறிக்கையொன்றை வழங்குமாறு சுங்கத்திற்கு விவசாயத்துறை அமைச்சு ஆலோசனை வழங்கியுள்ளதாக அவர் தெரிவித்தார்.

பொலன்னறுவை எலஹெர பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட போது அமைச்சர் இதனை தெரிவித்தார்.

மேலும் , ஏற்றுமதியை அதிகரித்து இறக்குமதியை குறைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என அமைச்சர் இதன் போது குறிப்பிட்டிருந்தார்.

இதனிடையே உள்ளூரில் பழங்களுடன் தொடர்புடைய உற்பத்திகளை ஊக்குவிப்பதற்காகவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: