பளை பொது மருத்துவமனையில் விடுதிகள் இன்மையால் நோயாளர்கள் பெரும் சிரமம்!

Tuesday, October 2nd, 2018

கிளிநொச்சி மாவட்டம் பளை பொது மருத்துவமனையில் ஆண்களுக்கான தங்கும் விடுதிகள் இல்லாமையால் நோயாளர்கள் பெரும் சிரமங்களுக்கு முகம் கொடுத்துள்ளனர்

ஏ9 வீதிக்கு அருகாமையில் காணப்படும் பளை மருத்துவமனையில் இதுவரை ஆண்களுக்கான நிரந்தர விடுதி அமைக்கப்படவில்லை. சுமார் 10 கட்டில்கள் மாத்திரம் வைக்கக்கூடிய அரைச்சுவர் வைக்கப்பட்ட நிலையில் ஒரு கட்டிடத்திலேயே ஆண்கள் விடுதி இயங்கிவருவதாக தெரிவிக்கப்படுகிறது.

நோயாளிகள் தங்கி சிகிச்சை பெறுவதற்கானவ சதிகள் அங்கில்லை என பலரும் குற்றம் சாட்டுகின்றனர். ஏ9 வீதியில் இடம்பெரும் விபத்துக்களால் அதிகளவானோர் சிகிச்சை பெற்றுள்ளனர். படுகாயமடைந்தவர்கள் சாவகச்சசேரி, யாழ்ப்பாண மருத்துவமனைகளுக்கு அனுப்பக்கூடியதாக பளைமருத்துவமனை அமைந்துள்ளது.

சகாதார அமைச்சின் நிதி ஒதுக்கீடுகள் எல்லாமாவட்டங்களுக்கு வழங்கப்படுவதை போன்று பளைமருத்து வமனைக்கும் வழங்கப்படும் நிதிகட்டடங்கள் அமைப்பதற்கு போதுமானதாக இல்லை எனதெரிவிக்கப்படுகிறது.

அமைச்சு நிதிஒதுக்கீட்டை அதிகரிக்கும் போது இம் மருத்து வமனைக்கும் கட்டிடம் அமைப்பதற்குநிதி ஒதுகீடு செய்யப்பட வேண்டுமென கிளிநொச்சி மாவட்ட பிராந்தியசு காதாரசேவைகள் பணிப்பாளர் கேட்டுக்கொண்டார்.

Related posts: