பளையில் பேருந்துடன் ஹயஸ் மோதி கோரவிபத்து: ஐவர் பலி!

யாழ்ப்பாணத்தில் இருந்து சென்ற தனியார் பேருந்தும் கொழும்பில் இருந்து வந்த ஹயஸ் வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியதில் ஹயஸ் வாகனத்தில் வந்த 5 பேர் ஸ்தலத்தில் பலியானதுடன் மேலும் 6 பேர் படுகாயமடைந்துள்ளனர்..
குறித்த கோர விபத்து இன்று(15) காலை 6 மணியளவில் பளை தர்மங்கேணி பகுதியில் நடந்துள்ளது.
இச்சம்பவத்தில் ஸ்தலத்திலேயே 5 பேர் துடிதுடித்து பலியாகியுள்ளனர். மேலும் 6 பேர் படுகாயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் யாழ் போதனா வைத்தியசாலைககு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணத்திலிருந்து மத்துகம நோக்கி பயணித்த தனியார் பேருந்து ஒன்று எதிர் திசையில் பயணித்த ஹயஸ்வான் ஒன்றுடன் மோதி அதிகாலை விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்தின் போது ஹயஸ் வானில் பயணித்த ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேர் உள்ளிட்ட ஐவர் உயிரிழந்துள்ளனர்.
Related posts:
நாளை முதல் தேசிய ஒருங்கிணைப்பு மற்றும் நல்லிணக்க வாரம் ஆரம்பம்!
முப்பத்தைந்து வயதிற்கு மேற்பட்ட வடமாகாண வேலையற்ற பட்டதாரிகளுக்கு அவசர வேண்டுகோள்
இலங்கை புகையிரத திணைக்களத்தின் வருமானம் உயர்வு!
|
|