பல மாகாணங்களில் இன்று பாடசாலைகளுக்கு விடுமுறை – வடக்கில் 12 மணிவரை என்ற அறிவிப்பால் பெரும் அசௌகரியத்துக்குள்ளான மாணவர்கள்!

Thursday, May 12th, 2022

நாட்டின் பல பகுதிகளிலுள்ள பாடசாலைகளுக்கு இன்று (12) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் கிழக்கு, தென், மேல், மத்திய மற்றும் சப்ரகமுவ ஆகிய மாகாணங்களிலுள்ள அனைத்து அரச பாடசாலைகளுக்கும் இன்று(12) விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக மாகாணக் கல்விப் பணிப்பாளர்கள் தெரிவித்தனர்.

இதேவேளை, வட மேல் மாகாணத்தில் கல்வி நடவடிக்கைகளை முன்னெடுக்கக்கூடிய பாடசாலைகளை மாத்திரம் இன்று(12) திறக்குமாறு மாகாண கல்விப் பணிப்பாளருக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

இதனிடையே, வட மாகாணத்திலுள்ள அனைத்து அரச பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகளும் இன்று (12) நண்பகல் 12 மணி வரை இடம்பெறும் என கல்வி அமைச்சின் உயரதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதனால் இன்றையதினம் மாணவர்கள் பெருமளவில் பாடசாலைகளுக்டகு செல்லாத நிலை காணப்பட்டது.

இதேவேளை குறித்த இன்ற பாலை 7 மணிவரை ஊரடங்கு அமுலில் இருந்த நிலையிர் 7.30 பாடசாலைகள் ஆரம்பித்தமையாலும் இது குறித்த அறிவிப்பு மாணவர்களிடம் போதுமானளவு சென்றடையாமையாலும் அதிகளவான மாணவர்கள் பெரும் அசௌகரியங்களை சந்தித்துள்ளதாக பெற்றோர் சுட்டிக்காட்டியிருந்தனர்.

இதேவேளை, மேல் மாகாணத்திலுள்ள அனைத்து அரச பாடசாலைகளுக்கும் இன்று(12) விடுமுறை வழங்கப்படுவதாக மாகாணக் கல்வி பணிப்பாளர் நேற்று(11) அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது..

000

Related posts: