பல மாகாணங்களிலும் மழை – பலத்த காற்றும் வீசும் – வளிமண்டலவியல் திணை எதிர்வுகூறல்!

Tuesday, July 12th, 2022

சப்ரகமுவ மாகாணத்திலும் நுவரெலியா மற்றும் கண்டி மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேல் மாகாணத்திலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும்.

மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளிலும் வடக்கு, வடமத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும் திருகோணமலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-50 கிலோ மீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.

கடல் பகுதிகளில், புத்தளத்திலிருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாக மாத்தறை வரையான கடற்கரைக்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் பல இடங்களில் மழை பெய்யும்.

காற்று தென்மேற்கு திசையில் வீசும், காற்றின் வேகம் மணிக்கு 30-40 கி.மீ. புத்தளத்திலிருந்து காங்கேசன்துறை மற்றும் மன்னார் ஊடாக திருகோணமலை வரையிலும் மாத்தறையிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளிலும் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 50-55 கிலோ மீற்றர் வரை அதிகரித்து வீசக்கூடும்.

புத்தளத்திலிருந்து காங்கேசன்துறை மற்றும் மன்னார் ஊடாக திருகோணமலை வரையிலும் மாத்தறையிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளும் அவ்வப்போது கொந்தளிப்பாக காணப்படும். நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புக்கள் மிதமானதாக இருக்கும் என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது..

000

Related posts:


கச்சதீவில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட புனித அந்தோனியார் தேவாலயத்தின் திறப்பு விழா இடம்பெற்றது!
தற்கொலை குண்டு தாக்குதலின் கோரமுகத்தை புனித அந்தோனியார் ஆலயத்தில் காணமுடிந்தது - இந்தியப் பிரதமர்!
நாட்டிலேற்பட்டுள்ள கொரோனா வைரஸின் தாக்கம் வலுவிழந்து செல்ல மேலும் இரண்டு வருடங்கள் ஆகலாம் - சுகாதார ...