பல்வேறு மோசடி சம்பவங்கள் – மாதாந்தம் 100 பேருந்து நடத்துனர்கள் பணியிலிருந்து இடைநிறுத்தப்படுவதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவிப்பு!

Monday, September 18th, 2023

பல்வேறு மோசடி சம்பவங்கள் காரணமாக மாதாந்தம் 100 பேருந்து நடத்துனர்கள் பணியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.

இதன்காரணமாக அவர்களுக்கு பதிலீடாக புதிய பேருந்து நடத்துனர்களை சேவையில் இணைத்துக்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.

அதற்கமைய, 381 பேருந்து நடத்துனர்களை புதிதாக சேவையில் இணைத்துக்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அந்த சபையின் தலைவர் லலித் டி அல்விஸ் தெரிவித்துள்ளார்.  

அதேநேரம், புதிதாக 912 பேருந்து சாரதிகளையும் புதிதாக சேவையில் இணைத்துக்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

000

Related posts:


புதிதாக பரவிவரும் பிரித்தானிய வைரஸே இலங்கையில் கொரோனா உயிரிழப்புகள் அதிகரிப்புக்கு காரணம் - இராணுவத...
சுன்னாகத்தில் திரைப்பட பாணியில் வாள்வெட்டு தாக்குதல் - நால்வர் யாழ் போதனா வைத்திய சாலையில் அனுமதி!
போக்குவரத்தை சீராக்கும் வகையில் பயணிகள் படகு ஒன்றினை பெற்றுக்கொடுங்கள் - இந்தியத் தூதுவரிடம் நெடுந்த...