பல்கலை மோதல் விவகாரம் : சிங்கள மாணவர்கள் நால்வரை மன்றில் முன்னிலையாகுமாறு பணிப்பு!

Thursday, September 1st, 2016

யாழ்.பல்கலைக்கழக மாணவர்களுக்கிடையில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தில் தமிழ்மாணவர்களினால் குற்றஞ்சாட்டப்பட்ட சிங்கள மாணவர்கள் நால்வரையும் எதிர்வரும்22ம் மீள நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு யாழ்.நீதவான் நீதிமன்ற நீதிபதி சதீஸ்கரன் கோப்பாய் பொலிஸாருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

குறித்த வழக்கு இன்றைய தினம் யாழ்.நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே நீதிபதி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். கடந்த ஜூலை மாதம் யாழ்.பல்கலைக்கழகத்தில் முதலாம் வருட விஞ்ஞான பீட மானவர்களைஇரண்டாம் வருட விஞ்ஞான பீட மாணவர்களை வரவேற்பதற்கு ஏற்பாடு செய்திருந்த போதுவழமைக்கு மாறாக சிங்கள மாணவர்கள் கண்டிய நடனத்தை நடாத்த முற்ப்பட்டதையடுத்துதமிழ் சிங்கள மாணவர்களிடையில் முரண்பாடு ஏற்பட்டு பாரிய கலவரமாகமாறியிருந்தது.

இதனையடுத்து சம்பவம் தொடர்பில் தமிழ், சிங்கள மாணவர்கள் எதிர்எதிராக முறைப்பாடுகளை மேற்கொண்டிருந்தனர்.மேலும் தமிழ் மாணவர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டுக்கமையஅவர்கள் நீதிமன்றினால் பிணையில் விடுதலை செய்யப்பட்டிருந்தனர்.

இந்நிலையில்சிங்கள மாணவர்களுக்கு எதிராக தமிழ் மாணவர்களால் மேற்கொள்ளப்பட்டமுறைப்பாட்டுக்கமைய நான்கு சிங்கள மாணவர்கள் இன்றைய தினம் யாழ்.நீதிவான்நீதிமன்றில் முன்னிலையாகியிருந்தனர்.இதன்படி வழக்கு விசாரணையின் போது முறைப்பாட்டாளர்கள் சார்பில் மன்றில்முன்னிலையாகியிருந்த சட்டத்தரணி சயந்தன் குறித்த மாணவர்களுக்கிடையிலான மோதல்கலவர சம்பவமானது முடிவுற்று தற்போது இரு மாணவர்களும் சமாதான முறையில் கற்றல்செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் இவ் வழக்கு விசாரனையை தமிழ்மாணவர்களது வழக்கு தவணையின் போதே விசாரணைக்கு எடுத்துக்கொண்டால் நீதிமன்றம்மேலதிக விசாரணை நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் என மன்றில்தெரிவித்திருந்தார்.இதனையடுத்து குறித்த நான்கு சிங்கள மாணவர்களையும் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில்வாக்குமூலத்தை பெற்றுக்கொள்ளுமாறும் அதன் பின்னர் அவர்களை மீளவும் எதிர்வரும்22ம் திகதி மன்றில் முன்னிலைப் படுத்துமாறும் கோப்பாய் பொலிஸாருக்கு நீதிவான்பணித்துள்ளார்.

Related posts: