பல்கலை மாணவர் இருவரின் உயிரிழப்பு சம்பவம் தொடர்பான பொலிசாருக்கு விளக்கமறியல் நீடிப்பு!

Saturday, January 28th, 2017

யாழ். பல்கலைக்கழக மாணவர் இருவரின் உயிரிழப்பு சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஐந்து பொலிசாருக்கான விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

யாழ். கொக்குவில் பகுதியில் இரு பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழந்தமை தொடர்பான வழக்கு நேற்று யாழ் நீதவான் நீதிமன்றில் நீதவான் சி.சதீஸ்தரன் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது நீதவான் இந்த விளக்கமறியல் நீடிப்புக்கான உத்தரவை பிறப்பித்தார்

உயிரிழந்த மாணவர்களின் மரணச் சான்றிதழ் யாழ். போதனா வைத்தியசாலையால் மன்றில் இன்றையதினம் சமர்ப்பிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து அறிக்கை  மாணவர்களின் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது

மாணவர்களின் பெற்றோர்களுக்குப் பொலிஸார் அச்சுறுத்தல் விடுத்தால் நடவடிக்கை எடுப்பதற்கான பொலிஸ்மா அதிபரின் உறுதிமொழி அடங்கிய அறிக்கை உள்ளிட்டவை  மன்றில் நேற்று சமர்ப்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

22-10-2016 12.10.9 9

Related posts: