பல்கலை மாணவர்கள் படுகொலை – பொலிஸ் அதிகாரிகளுக்கு விளக்கமறியல் நீடிப்பு!

Friday, December 16th, 2016

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர்கள் கொலை தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஐந்து பொலிஸ் அதிகாரிகளையும் இந்த மாதம் 30ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த வழக்கு இன்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே யாழ்.நீதவான் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. உயிரிழந்த இரு மாணவர்களில் ஒருவர் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார் என பிரேத பரிசோதனைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

இந்த சம்பவத்தில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள ஐந்து பொலிஸ் அதிகாரிகளினதும் பணி இடைநீக்கம் செய்யப்பட்டு அவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.

குறித்த படுகொலை சம்பவம் யாழ். கொக்குவில் குளப்பிட்டி பகுதியில் கடந்த மாதம் 20ஆம் திகதி இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

CvWJX_DUIAA_0kK

Related posts: