பல்கலை மாணவர்களுக்கு வட்டியில்லா கடனில் மடிக்கணனிகள்!

Thursday, May 12th, 2016
2016 ஆம் ஆண்டிற்கான வரவு செலவு திட்ட யோசனைகளுக்கு அமைவாக பல்கலைக்கழக மாணவர்களுக்கு வட்டியில்லா கடன் அடிப்படையில் மடிக்கணனிகளை வழங்குவதற்கு உயர் கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.

இதனடிப்படையில் 3 வருடங்களுக்கு இந்த கடன் வழங்கப்படவுள்ளதாக உயர் கல்வி அமைச்சின் மேலதிக செயலாளர் பி.ஜீ ஜயசிங்க தெரிவித்துள்ளார்.

இந்த நடவடிக்கைகள் இன்னும் 2 வாரங்களுக்குள் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் இதற்கான 2 வங்கிகளை தெரிவு செய்துள்ளதாகவும் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.

பல்கலைக்கழகத்திற்கு அருகிலுள்ள வங்கிக் கிளைகளூடாகவே இந்த கடன்கள் வழங்கப்படவுள்ளதாகவும் உயர் கல்வி அமைச்சின் மேலதிக செயலாளர் பி.ஜீ ஜயசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts: